SBS Tamil-logo

SBS Tamil

SBS (Australia)

Independent news and stories from SBS Audio, connecting you to life in Australia and Tamil-speaking Australians. - தமிழ் பேசும் ஆஸ்திரேலியர்களுடனும், ஆஸ்திரேலிய வாழ்க்கையுடனும் இணைய உங்களுக்கு உதவும் பக்கசார்பற்ற செய்திகள் மற்றும் கதைகள்.

Location:

Sydney, NSW

Description:

Independent news and stories from SBS Audio, connecting you to life in Australia and Tamil-speaking Australians. - தமிழ் பேசும் ஆஸ்திரேலியர்களுடனும், ஆஸ்திரேலிய வாழ்க்கையுடனும் இணைய உங்களுக்கு உதவும் பக்கசார்பற்ற செய்திகள் மற்றும் கதைகள்.

Language:

Tamil

Contact:

SBS Radio Sydney Locked Bag 028 Crows Nest NSW 1585 Australia (02) 9430 2828


Episodes
Ask host to enable sharing for playback control

நியூ சவுத் வேல்ஸ் காலனியைக் கட்டியெழுப்பிய கேணல் லக்லான் மக்குவாரி

1/26/2025
காலத்துளி நிகழ்ச்சியில் நியூ சவுத் வேல்ஸ் காலனியைக் கட்டியெழுப்பிய கேணல் லக்லான் மக்குவாரி குறித்து நிகழ்ச்சி படைத்தவர் குலசேகரம் சஞ்சயன்.

Duration:00:03:59

Ask host to enable sharing for playback control

Medal of the Order of Australia (OAM) recipient Dr Samantha Pillay - ஆஸ்திரேலிய அரசின் அதியுயர் விருது பெறும் தமிழ்ப்பின்னணி கொண்ட Dr சமந்தா பிள்ளை

1/26/2025
Dr Samantha Pillay received Medal of the Order of Australia (OAM) in the General Division for her service to urology. Dr Samantha Pillay is a surgeon, entrepreneur, international five-time Amazon No. 1 best-selling, multi-award-winning author, multi-award-winning AI film and AI music producer and director, and speaker. - சிறுநீரகவியல் துறையில் அவரது சேவைக்காக Dr சமந்தா பிள்ளை அவர்களுக்கு ஆஸ்திரேலிய அரசு வழங்கும் அதியுயர் விருதுகளில் ஒன்றான OAM விருது இந்த வருடம் வழங்கப்பட்டது. Dr சமந்தா பிள்ளை ஒரு அறுவை சிகிச்சை நிபுணர், தொழில் முனைவோர், பல விருதுகளை வென்ற எழுத்தாளர், இசை மற்றும் திரைப்பட தயாரிப்பாளர், இயக்குனர் மற்றும் பேச்சாளர்.

Duration:00:09:18

Ask host to enable sharing for playback control

76 முறை மனைவியைக் கத்தியால் குத்தியவர் சிறை செல்லாமல் தப்பியது எப்படி?

1/26/2025
தெற்கு ஆஸ்திரேலியாவிலுள்ள Findon என்ற இடத்தில் வசித்து வந்த Maria Dimasi என்ற 85 வயதான பெண்ணை 2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அவரது கணவர் 76 முறை கத்தியால் குத்தி கொலை செய்திருந்தார்.

Duration:00:05:35

Ask host to enable sharing for playback control

Sex Education: Understanding sexual pleasure - செக்ஸ்: கொஞ்சம் அறிதல், நிறைய புரிதல்

1/26/2025
Dr. Niveditha Manokaran is a medical practitioner with over 15 years of experience in Sexual Health and HIV care. A TEDx speaker, sex educator, and domestic violence advocate, she is passionate about empowering women and youth. As the founder of Untaboos, she challenges societal taboos by providing education, counseling, and raising awareness within communities. Dr. Niveditha’s journey and expertise embody her mantra, "Educate Yourself, Protect Yourself," establishing her as a powerful voice for empowerment and personal growth. In this first part of her series on sexual health, Dr. Niveditha explores the topic of sexual pleasure. Produced by RaySel, Part 1. - டாக்டர். நிவேதிதா மனோகரன் அவர்கள் பாலியல் நலம் மற்றும் எச்.ஐ.வி பராமரிப்பில் 15 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவமுள்ள மருத்துவர். அவர் ஒரு TEDx பேச்சாளர், பாலியல் கல்வியாளர் மற்றும் குடும்ப வன்முறைக்கு எதிராக இயங்கும் சமூக ஆர்வலர். Untaboos எனும் அமைப்பின் நிறுவனராக இயங்கி, சமூகத்திற்கான கல்வி, ஆலோசனை மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணியில் ஈடுபட்டிருப்பவர். பாலியல் நலம் குறித்து அவர் வழங்கும் “செக்ஸ்: கொஞ்சம் அறிதல், நிறைய புரிதல்” தொடரின் முதற் பகுதியில் பாலியல் இன்பம் பற்றி டாக்டர் நிவேதிதா அவர்கள் தகவலை முன்வைக்கிறார். நிகழ்ச்சியாக்கம்: றைசெல். பாகம்: 1.

Duration:00:11:25

Ask host to enable sharing for playback control

இந்தியா & தமிழ்நாடு: கடந்தவார நிகழ்வுகளின் தொகுப்பு

1/26/2025
மும்பையில் கடந்த 2008 ம் ஆண்டு நவம்பர் மாதம் 26ம் தேதி நடத்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்பு வழக்கின் முக்கிய குற்றவாளியான தஹவ்வூர் ராணாவை இந்தியாவுக்கு நாடு கடத்த அமெரிக்க உச்சநீதிமன்றம் அனுமதி, தமிழக ஆளுநர் குடியரசு தினத்தன்று அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணித்த தமிழக அரசு, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரனை சந்திக்கவில்லை என்ற விமர்சனங்கள், வேங்கைவயலில் குடிநீரில் மனிதக்கழிவு கலக்கப்பட்டு இரண்டு ஆண்டுகளை கடந்து விட்ட நிலையில் இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி காவல்துறை விசாரித்து வருவது போன்ற செய்திகளின் பின்னணியுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்

Duration:00:10:53

Ask host to enable sharing for playback control

ஒலிம்பிக் விளையாட்டு வீரர்கள் பலருக்கு 2025 Order of Australia விருது வழங்கப்பட்டுள்ளது

1/26/2025
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய ( திங்கட்கிழமை 27/01/2025) செய்திகள். வாசித்தவர் : செல்வி.

Duration:00:04:31

Ask host to enable sharing for playback control

Celebrating, reflecting, mourning: Indigenous and migrant perspectives on January 26 - SBS Examines : ஜனவரி 26 ஆஸ்திரேலிய தினம் - கொண்டாட்டமா? துக்கமா?

1/26/2025
Some celebrate Australia Day with patriotic pride, others mourn and protest. What’s the right way to mark January 26, and can you have pride in your country while also standing against injustice? - ஆஸ்திரேலிய வரலாற்றில், ஜனவரி 26 1788 -இல் first fleet கப்பல் ஆஸ்திரேலியாவில் தரையிறங்கி முதல் பிரிட்டிஷ் காலனியை நிறுவியது. இது ஆஸ்திரேலியாவின் காலனித்துவத்தின் தொடக்கமாகும், இதுவே பூர்வீகக்குடி மற்றும் டோரஸ் ஸ்ட்ரெய்ட் தீவு மக்களுக்கு எதிரான பரவலான வன்முறையின் ஆரம்பமாகவும் பார்க்கப்படுகிறது.

Duration:00:06:13

Ask host to enable sharing for playback control

ஆஸ்திரேலிய, உலக நிகழ்வுகளின் இந்த வார தொகுப்பு

1/24/2025
ஆஸ்திரேலியாவிலும், உலகிலும் இந்த வாரம் (19 – 25 ஜனவரி 2025) நடந்த முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு. பதிவு செய்யப்படும் நாள்: 25 ஜனவரி 2025 சனிக்கிழமை. வாசித்தவர்: றைசெல்.

Duration:00:04:34

Ask host to enable sharing for playback control

How do heatwaves highlight inequality? - SBS Examines : சிட்னியின் சில புறநகரங்கள் மற்றவற்றை விட மிகவும் வெப்பமாக இருப்பது ஏன்?

1/24/2025
In the midst of one of the hottest Australian summers on record, experts say heat inequality is deepening social division. - ஆஸ்திரேலியர்கள் மிகவும் வெப்பமான கோடைகாலத்தின் மத்தியில் உள்ளனர். ஆனால் கோடை வெயில் மற்றவர்களை விட சிலருக்கு அதிக வெப்பமாக இருக்கிறது.

Duration:00:06:05

Ask host to enable sharing for playback control

இலங்கையின் இந்த வார முக்கிய நிகழ்வுகள்

1/23/2025
யாழ்.கலாச்சார மண்டபம் பெயர் மாற்றம் பெற்றுள்ளமை தொடர்பில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளன; சீரற்ற காலநிலையால் விவசாயிகள் கடும் பாதிப்பை எதிர் கொண்டுள்ளார்கள்; இலங்கையிலுள்ள மியான்மர் அகதிகளை வெளியேற்றக்கோரி கருத்துக்கள் தெரிவிக்கப்படும் நிலையில், தஞ்சம் வழங்க கோரி போராட்டங்கள் இடம்பெற்றுள்ளன. அவை உள்ளிட்ட செய்திகளோடு “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

Duration:00:08:19

Ask host to enable sharing for playback control

ஜூலை முதல் தொழிற்பயிற்சி கொடுப்பனவுகளை அதிகரிப்பதாக பெடரல் அரசு அறிவிப்பு

1/23/2025
SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய ( வெள்ளிக்கிழமை 24/01/2025) செய்திகள். வாசித்தவர் : செல்வி.

Duration:00:04:49

Ask host to enable sharing for playback control

நாம் வாங்கும் இயற்கை விவசாயப் பொருட்கள் உண்மையில் இயற்கை தானா?

1/23/2025
கடந்த ஆண்டு பிற்பகுதியில் நேஷனல்ஸ் செனட்டர் Bridget McKenzie தாக்கல் செய்த இயற்கை விவசாய பொருட்களுக்கான தேசிய தரநிலை சட்டமுன்வடிவை ஒரு செனட் குழு தற்போது ஆய்வு செய்து வருகிறது. இது குறித்த விசாரணை அறிக்கை இம்மாத இறுதிக்குள் வெளிவரவுள்ளது. இது குறித்த செய்தியின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் செல்வி.

Duration:00:06:19

Ask host to enable sharing for playback control

விக்டோரியாவில் ஐவர் பலியாகக் காரணமாகவிருந்த ஓட்டுநருக்கு ஐந்தரை ஆண்டுகள் சிறை!

1/23/2025
விக்டோரியா மாநிலத்தில் இடம்பெற்ற சாலை விபத்தில் ஐவர் பலியாகக் காரணமாகவிருந்த ஓட்டுநருக்கு ஐந்தரை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.

Duration:00:02:01

Ask host to enable sharing for playback control

வாகன ஓட்டிகளுக்கு ஓர் எச்சரிக்கை!

1/23/2025
ஆஸ்திரேலியா தின விடுமுறைக் காலத்தையொட்டி ACT, மேற்கு ஆஸ்திரேலியா மற்றும் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் சாலை விதிமுறைகளை மீறுவோருக்கான தண்டனை அதிகரிக்கப்படுகிறது.இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.

Duration:00:02:34

Ask host to enable sharing for playback control

சிட்னி பொங்கல் விழாவில் இவர்கள் இப்படி கூறினார்கள்...

1/23/2025
சிட்னியில் தமிழ் அமைப்புகளும், தமிழ் வர்த்தக அமைப்புகளும் இணைந்து நடத்திய மாபெரும் பொங்கல் விழா Pendle Hill எனுமிடத்தில் ஜனவரி மாதம் 19 ஆம் தேதி – ஞாயிற்றுக்கிழமை கோலாகலமாக நடைபெற்றபோது சில அரசியல் தலைவர்களுடன் உரையாடினோம். அந்த உரையாடலில் தங்கள் கருத்தை பகிர்ந்து கொள்கின்றனர் – Liz Tilly (Greens candidate for Paramatta – Federal) (top left), Kalvin Biag (Liberal candidate for Prospect – NSW) (top right), Hugh McDermott MP (Prospect – NSW) (bottom left) மற்றும் Katie Mullens (Liberal candidate for Paramatta – Federal) (bottom right) ஆகியோர். அவர்களோடு உரையாடுகிறார் றைசெல்.

Duration:00:07:23

Ask host to enable sharing for playback control

சிட்னி பொங்கல் விழாவில் இவர்கள் இப்படி கூறினார்கள்...

1/23/2025
சிட்னியில் தமிழ் அமைப்புகளும், தமிழ் வர்த்தக அமைப்புகளும் இணைந்து நடத்திய மாபெரும் பொங்கல் விழா Pendle Hill எனுமிடத்தில் ஜனவரி மாதம் 19 ஆம் தேதி – ஞாயிற்றுக்கிழமை கோலாகலமாக நடைபெற்றபோது சில அரசியல் தலைவர்களுடன் உரையாடினோம். அந்த உரையாடலில் தங்கள் கருத்தை பகிர்ந்து கொள்கின்றனர் – Cumberland City Councilயின் Lord Mayor Ola Hamed, Councillor Enver Yasar, மற்றும் Councillor Steve Yang ஆகியோர். அவர்களோடு உரையாடுகிறார் றைசெல்.

Duration:00:05:42

Ask host to enable sharing for playback control

சிட்னி பொங்கல் விழா பற்றிய இவர்கள் பார்வை என்ன?

1/23/2025
சிட்னியில் தமிழ் அமைப்புகளும், தமிழ் வர்த்தக அமைப்புகளும் இணைந்து நடத்திய மாபெரும் பொங்கல் விழா Pendle Hill எனுமிடத்தில் ஜனவரி மாதம் 19 ஆம் தேதி – ஞாயிற்றுக்கிழமை கோலாகலமாக நடைபெற்றபோது சில சமூகத் தலைவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களுடன் உரையாடினோம். அந்த உரையாடலில் தங்கள் கருத்தை பகிர்ந்து கொள்கின்றனர் – Cumberland City Councilயின் கவுன்சலர் சுஜன் செல்வேந்திரன், துர்கா ஓவன் மற்றும் திரு ஆறுமுகம் ஆகியோர். அவர்களோடு உரையாடுகிறார் றைசெல்.

Duration:00:07:48

Ask host to enable sharing for playback control

சிட்னி பொங்கல் விழா எப்படி சாத்தியமாகிறது?

1/23/2025
சிட்னியில் தமிழ் அமைப்புகளும், தமிழ் வர்த்தக அமைப்புகளும் இணைந்து நடத்திய மாபெரும் பொங்கல் விழா Pendle Hill எனுமிடத்தில் ஜனவரி மாதம் 19 ஆம் தேதி – ஞாயிற்றுக்கிழமை கோலாகலமாக நடைபெற்றபோது சில சமூகத் தலைவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களுடன் உரையாடினோம். அந்த உரையாடலில் தங்கள் கருத்தை பகிர்ந்து கொள்கின்றனர் –விழாவின் ஒருங்கிணைப்பாளர்கள் பார்த்தீபன், தனுஷாந்த் செல்வேந்திரன் மற்றும் பார்வையாளர் வைரமுத்து தேவராஜ் ஆகியோர். அவர்களோடு உரையாடுகிறார் றைசெல்.

Duration:00:05:45

Ask host to enable sharing for playback control

சிட்னி பொங்கல் விழா கோலாகலமாக நடந்துகொண்டுள்ளது!

1/23/2025
சிட்னியில் தமிழ் அமைப்புகளும், தமிழ் வர்த்தக அமைப்புகளும் இணைந்து நடத்திய மாபெரும் பொங்கல் விழா Pendle Hill எனுமிடத்தில் ஜனவரி மாதம் 19 ஆம் தேதி – ஞாயிற்றுக்கிழமை கோலாகலமாக நடைபெற்றபோது சில சமூகத் தலைவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களுடன் உரையாடினோம். அந்த உரையாடலில் தங்கள் கருத்தை பகிர்ந்து கொள்கின்றனர் – விழா ஒருங்கிணைப்பாளர்கள் மருத்துவர் நளாயினி & மருத்துவர் பரன் மற்றும் யாழ் இந்து கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் (சிட்னி) தலைவர் ரவிராஜ் வேலுப்பிள்ளை ஆகியோர். அவர்களோடு உரையாடுகிறார் றைசெல்.

Duration:00:06:12

Ask host to enable sharing for playback control

தமிழரின் தொன்மையை, வரலாற்றை இந்த தலைமுறை அறிவது முக்கியமா?

1/23/2025
சிட்னியில் தமிழ் அமைப்புகளும், தமிழ் வர்த்தக அமைப்புகளும் இணைந்து நடத்திய மாபெரும் பொங்கல் விழா Pendle Hill எனுமிடத்தில் ஜனவரி மாதம் 19 ஆம் தேதி – ஞாயிற்றுக்கிழமை கோலாகலமாக நடைபெற்றபோது அதிக கண்காட்சியை அமைத்திருந்தார் எழுத்தாளர் அ. முத்துக்கிருஷ்ணன் அவர்கள். தமிழ்நாட்டிலிருந்து தற்போது ஆஸ்திரேலியா வந்திருக்கும் சமூக ஆர்வலர், சுற்றுச் சூழல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் எழுத்தாளர், கட்டுரையாளர், தொலைக்காட்சி விமர்சகர் என்று பன்முகம் கொண்ட அ.முத்துக்கிருஷ்ணன் அவர்களை சந்தித்து உரையாடுகிறார் றைசெல்.

Duration:00:12:24